சகல தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் பணி புறக்கணிப்பு.

0

அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இவ்வாறு பணிப்புறக்கணிப்பு இடம் பெறுகிறது.

இதன் பிரகாரம் சகல துறைகளையும் உள்ளடக்கம் வகையில் குறித்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க மையம் அறிவித்துள்ளது.

மேலும் அரச தலைவர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலகும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply