பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு இன்று முதல் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது வரையில் மூன்று மாவட்டங்களில் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதன் அறிக்கைகள் அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏனைய மாவட்டங்களினதும் தரவுகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பயிர்ச் செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு 25,000 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.



