எதிர்வரும் இரண்டு நாட்களில் 15,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம் நாளை மற்றும் நாளை மறுதினம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு குறித்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என லிட்ர் நிறுவனத் தலைவர் அறிவித்துள்ளார்.



