சேவைகளை மட்டுப்படுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்.

0

பொதுநிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தனியார் பேருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் பிரச்சினை காரணமாக, சேவைகளை மட்டுப் படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இந்த நிலமை நீடிக்க கூடுமென அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு, பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தொடருந்து சேவைகள் இன்று முதல் வழமைபோன்று இடம்பெறும்.

மேலும் உரிய கடமை நேரத்திற்கு சேவைக்கு அறிக்கையிடுமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் அறியபடுத்தியுள்ளதாக அதன் சங்கத்தின் இணைப்பாளர் எ.ஸ்.பி விதானகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply