இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை நிலையினைக் கருத்திற்கொண்டு சிலர் தமிழகத்துக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இந்நிலையில் கடல் மார்க்கமாக தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர் யாழ்- அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒரு காவல்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டவர்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



