தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்றையதினம் கடுமையான மின்துண்டிப்பு.

0

தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்றையதினம் கடுமையான மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டது.

இதன்பிரகாரம் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

அத்துடன் டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு பெரும்பாலான நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்வெட்டு நீண்ட நேரம் நீடித்தது. இரவு 7 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 5 மணி நேரமாக வரவில்லை.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று திணறல் ஏற்பட்டது. பல மாவட்டங்களில் நள்ளிரவுக்கு பிறகே மின்சாரம் மீண்டும் வந்தது.

மின்தடை ஏற்பட்ட மாவட்டங்களில் மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மின்தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

Leave a Reply