அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்அரச தலைவர் விடுத்த அவசர அழைப்பு.

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் பதவிகளை ஏற்று நாட்டின் தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து மக்களுக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply