புதிதாக அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்றுமுன்னர் ஆரம்பமானது.
இந்நிலையில் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களாக முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதற்கமைய நிதியமைச்சராக அலிசப் ரி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அடுத்து கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும், வெளி விவகார அமைச்சராக ஜீ. எல். பீரிஸ் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அவ்வாறு பெருந்தெருக்கள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.



