ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 600க்கும் அதிகமானோர் அதிரடி கைது.

0

இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 600க்கும் அதிகமானோர் அதிரடியாக கைது செயப்படுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சிறிது நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதிப கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

நிலைமையைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது மற்றும் 36 மணிநேர ஊரடங்குச் சட்டத்தை விதித்துள்ளது.

மேலும் குறித்த உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்த முயன்றவர்கள் தற்போது காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply