நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 3,200 தற்காலிக செவிலியர்களில் 800 பேர் பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் டி.எம்.எஸ். வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அத்துடன் பணி நீக்கத்தை ரத்துசெய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்ச்ருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால் அங்கு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.



