தொடருந்து சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 15 சதவீத தனியார் பேருந்து சேவைகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அருகிலுள்ள இலங்கை போக்குவரத்து சபையில் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என போக்குவரத்து அமைச்சரும், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரும் தமக்கு அறியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளும் வழமைக்கு திரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



