பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்.

0

பலதுறை தொழில்நுட்ப மற்றும் மக்களுக்கான வங்காள விரிகுடா முயற்சியான பிம்ஸ்டெக் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகின்றது .

இந்நிலையில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன் மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாக பங்கேற்கவுள்ளார்.

நீள மேசை மாநாடு மற்றும் தொடர்ச்சியான கூட்டங்களின் போது பிராந்திய குழுவாக பிம்ஸ்டெக் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் இதன்போது கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply