நீர்க் கட்டணப் பட்டியலைச் செலுத்ததாத பாவனையாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை.

0

நாட்டில் கொவிட் தொற்று காலப்பகுதியில் நீர்க் கட்டணப் பட்டியலைச் செலுத்ததாத சகல நுகர்வோரினதும் நீர்விநியோகத்தைத் துண்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் காலத்தில் தொடர்ச்சியாக நீர்விநியோக வழங்கலினால் 7.5 பில்லியன் ரூபாவை பாவனையாளர்களிடமிருந்து அறவிட வேண்டியிருப்பதாக வடிகாலமைப்புச் சபையின் மேலதிக முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

அந்த நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு பல முறை அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு பாவனையாளர்கள் பலர் உரிய வகையில் பதிலளிக்க தவறிவிட்டனர்.

மேலும் அவ்வாறனவர்களின் நீர்விநியோகத்தைத் துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply