இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் சம்பவித்துள்ளது.
அத்துடன் நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற போது குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பின்னும் பேருந்தில் பயணிகள் இருந்த போதிலும் யாருக்கும் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லையென காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை காவற்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



