அமெரிக்க டொலருக்கு எதிராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் , உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை 230 ரூபாவாக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அத்துடன் பரிமாற்ற வீதம் சந்தையை அதிக நெகிழ்வுத்தன்மையுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் மற்றும் அதன் குறிக்கோள் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதாகும்.
மேலும் இலங்கை மத்திய வங்கி (CBSL) உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் உள்ள போக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், தேவைப்பட்டால் பொருத்தமான கொள்கை மாற்றங்களைச் செய்ய நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.



