மருந்துகளுக்கு தட்டுப்பாடு.

0

இலங்கையில் சில அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு மட்டுமே உள்ளதாக இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் மன்றத்தின் தலைவர் சஞ்சீவ விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடைமுறைச் சாத்தியமற்ற விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் டொலர் நெருக்கடி என்பன இந்த மருந்துகளின் தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மருந்துப் பதிவுக் கட்டணம் முந்தைய விலையை விட பதினொரு மடங்கு அதிகம் என்றும் அதனால் என்எம்ஆர்ஏவின் சேவையில் திருப்தி அடைய முடியாது என்றும் தலைவர் கூறினார்.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வங்கிகள் அனுமதியளித்து கடன் கடிதங்களை வழங்காததால் இந்த நிலை மேலும் மோசமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply