இன்றும் பலமணிநேர மின் வெட்டு.

0

இலங்கையில் இன்றும் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பகல் வேளையில் காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப் பகுதியில் 5 மணி நேரமும், இரவு 06 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் இரண்டரை மணித்தியாலமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று வியாழக்கிழமை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் புதிய அட்டவணையானது இன்றைய மின்வெட்டு கால அட்டவணையைப் போன்றே இருக்கும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியுள்ளது.

மேலும் E, T, U, V மற்றும் W ஆகிய குழுக்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் பகல் நேர மின்வெட்டு காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply