வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று( 03) மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்கூறியுள்ளார்.
இதன்பிரகாரம் இன்று (03) முதல் எதிர்வரும் 08ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளாார்.
மேலும் வானிலை மாற்றம் தொடர்பில் அவர் வெளியிட்ட தகவலின் படி, “எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆகவே பொதுமக்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



