முன்னோர்களின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற இந்த 1 கனியை தானமாக கொடுத்தாலே போதும்…!!

0

ஒரு அமாவாசை நாளன்று அல்லது உங்களுடைய அம்மா அப்பா இவர்கள் இறந்த திதி அன்று ஒரு முழு பலாப்பழத்தை வாங்கி யாருக்கேனும் தானமாக கொடுக்க வேண்டும்.

ஒரு பலாப்பழத்தை தானம் செய்தால் 600 வகையான காய்கனிகளை தானம் செய்த புண்ணியம் நம்மை வந்து சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

வாழ்நாளில் ஒருவரால் 600 வகையான காய்கனிகளை ஒரே சமயத்தில் வாங்கி தானம் கொடுப்பது என்பது இயலாத காரியம்.

ஆனால் அந்த 600 காய்கனிகளை தானம் செய்த புண்ணியத்தை நமக்கு ஒருசேர கொடுப்பதுதான் இந்த பலாப்பழம்.

ஆகவே, சிறிய அளவில் இருக்கும் பலாப்பழமும் பெரிய அளவில் இருக்கும் பலாப்பழமும் அது உங்களுடைய சவுகரியம்.

முழுமையாக இருக்கும் பழுத்த கனியை வாங்கி கோவிலுக்கு தானமாக கொடுக்கலாம்.

ஒரு பிராமணருக்கு தானமாக கொடுக்கலாம்.

இயலாத ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுக்கலாம். ஆசிரமங்களுக்கு, முதியோர் இல்லத்திற்கு கூட தானமாக கொடுக்கலாம்.

அது அவரவர் விருப்பம். இப்படி ஏதாவது ஒரு இடத்தில் தானம் செய்தால் போதும்.

வாழ்நாளில் ஒரே ஒரு முறை முன்னோர்களை நினைத்து இந்த பழத்தை தானமாக கொடுத்து விடுங்கள்.

உங்களுடைய முன்னோர்களின் ஆத்மா உங்களை மனதார வாழ்த்தும்.

கோடான கோடி புண்ணியம் உங்களை வந்து சேரும்.

புண்ணிய காரியங்களுக்காக நாம் செய்யப்படும் தானம் பணிவோடு இருக்க வேண்டும்.

கொடுப்பவர்களின் கை மேலே ஓங்கி இருக்கக்கூடாது.

தலைகுனிந்து தாழ்ந்து, பணிவோடு தானத்தை செய்வதன் மூலமாக மட்டுமே நம்மால் பலனை பெற முடியும்.

தானம் கொடுப்பதால் நாம் என்றுமே பெரிய மனிதர்கள் ஆகிவிட முடியாது.

தானத்தை பெறுபவர்கள் மனநிறைவோடு, நாம் கொடுக்கும் தானத்தைப் பெற்று மனதார வாழ்த்தினால் தான் நமக்கு புண்ணியம் வந்து சேரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பணிவோடு பக்தியோடு, தானத்தை பெறுபவர்களை கடவுளாக பாவித்து தானம் செய்வது தான், தானத்திற்கு உண்டான பலனை பெற்றுத்தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply