இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலினால் அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு தொடர்ந்து வரும் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் , படகுகளுடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் சுரதா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவரும் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான என். தேவதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இந்த பேச்சுவார்த்தையின் ஊடாகவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.



