மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்
இலங்கையில் கொரோனாவுக்கு
எதிராக நான்காவது தடுப்பூசி வழங்குவது தொடர்பில், வாதிப்பதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மூன்றாவது தடுப்பூசி(பூஸ்டர்) இன்னும் பெருந்தொகையானோருக்கு செலுத்தவேண்டியுள்ளது.
இருப்பினும் இலங்கையில் நான்காவது தடுப்பூசி தொடர்பாக எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸரை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.



