இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
கோவிட் பரவல் தொடங்கியதில் இருந்து பல சந்தர்ப்பங்களில் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் நாள் குறித்து மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பயன்படுத்திய வாகனங்களின் அதிக விலையே இதற்குக் காரணம்.
இதனால் இலங்கையில் பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைத்த சுசுகி ஆல்டோ காரின் விலை தற்போது 4 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
மேலும், பயன்படுத்தப்பட்ட சுசுகி வேகன் ஆர் இன் விலை 6 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளது.
இந்த பின்னணியில், மின்சார கார்களின் விலையும் குறைவாக இல்லை. இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் நிசான் லீஃப் கார் 2.5 மில்லியன் ரூபா முதல் 3 மில்லியன் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வாகனங்களை இறக்குமதி செய்யும் வரை நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் தொடர்ந்தும் உயரும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



