தற்போது நாட்டில் ஒமிக்ரொன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன மிக வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில் 48 மணி நேரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் தமக்கு எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று முடிவுகளை தாமாகவே எடுத்துக்கொள்கின்றனர்.
இதனைவிடுத்து மருந்து உதவியை நாடுவதே சிறந்த தேர்வாக அமையும்.
இன்றைய நாட்களில் சமூகத்தில் ஒமிக்ரோன் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஆகவே நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவதே முதன்மை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



