மரணத்திற்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் பி. சீ. ஆர் பரிசோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுற்று அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழந்தவர்களுக்கு பி. சி. ஆர் பரிசோதனையோ கட்டாயம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேவைப்படுமாயின் சட்ட வைத்தியரின் விருப்பத்துடன் , பிஸியா பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



