குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழப்பு.

0

குருணாகல்- வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நான்கு சிறுமிகள் குளத்தில் நீராட சென்றிருந்தனர்.

குறித்த சிறுமிகள் நால்வரும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரு சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதினையுடையவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply