உங்களுடைய கைகளில் ஒரு கிண்ணத்தில் தாழம்பு குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக உங்கள் கையில் இருக்கும் குங்குமத்தை மோதிர விரலாலும் கட்டை விரலாலும் ஒவ்வொரு சிட்டிகை எடுத்து மகாலட்சுமி தாயாரின் முன்பு இருக்கும் கிண்ணத்தில் போடவேண்டும்.
குங்கும அர்ச்சனை செய்வது போலவே செய்யுங்கள்.
ஒவ்வொரு முறை குங்குமத்தை எடுத்து போடும் போது, இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான வசிய மந்திரம் இதோ.
ஓம் நமசிவாய, சகலரும் சகலமும் வசி வசி.
இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து, 108 முறை உங்கள் கைகளால் குங்குமத்தை எடுத்து மகாலட்சுமி பாதங்களில் இருக்கும் கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு ஒரே ஒரு குங்குமப்பூவை எடுத்து இந்த குங்குமத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.
அதன்பின்பு வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அந்த அர்ச்சனை செய்யப் பட்ட குங்குமமானது மகாலட்சுமி தாயாரின் பாதங்களிலேயே இருக்கட்டும்.
பூஜையை முடித்து விட்டு அதிலிருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.
