நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்நிலையில் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மாவட்டத்தில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் வடக்கு, வடமத்திய மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையின் அளவு தற்காலிகமாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் பனிமூட்டம் வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது.



