இளம் சமுதாயத்தினரை தவறான வழியில் வழிநடத்தவும், விஷ போதைப் பொருள் பாவனைக்காகவும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான விருந்து உபசாரங்களில் சுற்றிவளைக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல் துறை புலனாய்வு பிரிவினரின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தத்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று காதலர் தினம் என்பதால் இளைஞர்கள் தவறாக வழி நடத்துவதற்கு சிலர் முயல்கின்றனர் .
இதன் பிரகாரம் குறித்த சுற்றிவளைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.



