எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் போலி செய்திகளை பரப்பி, வாகன விற்பனை நிலையங்களுக்குள் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால், நாட்டில் வாகனங்களுக்கு பாரிய கேள்வி தற்போது நிலவி வருகின்றது.
அதேபோல் வாகனங்களின் விலைகள் தற்போது 100 வீதம் அதிகரித்துள்ளன.
மேலும் இவ்வாறான நிலையில், விரைவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சில வாகன விற்பனையாளர்கள் போலி செய்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகின்றது.



