வடமராட்சி மீனவர்கள் கறுப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் வடமராட்சி மீனவர்கள் 5 வது நாளாகவும் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் 5 வது நாளாக நேற்றைய தினம் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் வரமராட்சி மீனவர்கள் கடந்த 31-01-2022 ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்று முன்தினம் (03-02-2022) வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.



