கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்றைய தினம் இலங்கையில் 900 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 927 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் பிரகாரம் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 604,581 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம் நேற்றுமுன்தினம் குறித்த வைரஸ் தொற்றால் 16 மரணங்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.



