நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி அதிக விலைக்கு சீமெந்து விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
69 கிலோ கிராம் சீமெந்தினை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பஹா கிளை
அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.



