பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தீவிரவாதம் மற்றும் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட மூன்று தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும் முர்து பெர்னாண்டோ , யசந்தகோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.



