நாடுபூராகவும் 73 வது குடியரசு தின விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.
குறித்த குடியரசு தின நிகழ்வை முன்னிட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மந்திரிகள், அரசியல் தலைவர்கள் அரசு அலுவலகங்களில் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரள துறைமுகங்கள் , தொல்பொருள் மற்றும் அருங்காட்சிய துறை மந்திரி அகமது தேவர் கோவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன்போது அவர் ஏற்றிய தேசியக்கொடி தலைகீழாக இருந்தது.
இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் பின்னர் அவர் தேசிய கொடியை உடனடியாக கீழே இறக்கி சரி செய்து மீண்டும் நேராக ஏற்றினார்.
குறித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாநிலத்தின் மந்திரியே தேசிய கொடியை தலைகீழாக ஏற்றலாமா என காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை வெளியிட்டனர்.
அவர் பதவி விலக வேண்டும் என்று அம்மாநிலத்தின் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.



