கோர விபத்தில் உயிரிழந்த நபர்.

0

இகினியாகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இகினியாகல பகுதியிலிருந்து பிபில நோக்கி பயணம் செய்த முச்சக்கர வண்டியை வீதியை விட்டு விலகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் பலத்த காயமடைந்த சாரதி இகினியாகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் நாமல் ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த இருபத்தி ஐந்து வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave a Reply