இன்றும் நாளையும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லை என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய நேற்று பிற்பகல் 100 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைக்கபெற்றதன் காரணத்தால் எந்தவித மின்வெட்டு இன்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போதிய அளவிலான எரிபொருள் விநியோகிக்கப்பட்டதன் காரணத்தால் திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என இலங்கையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் சில நாட்களுக்கு மின்வெட்டு இன்றி மின்சாரத்தை வழங்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.



