ஆபத்தான கடற்கரைகளை அடையாளப்படுத்துமாறு கோரிக்கை.

0

ஆபத்தான கடற்கரை பகுதிகள் தொடர்பில் அறிவுறுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தினந்தோறும் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இதற்கமைய வெலிகம கடற்கரை பகுதியில் நீராட சென்று காணாமல் போன 12 வயதான மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்தும் முனெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போயிருந்த இரண்டு பாடசாலை மாணவர்களில் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெலிகம கடற் பகுதியில் நான்கு மாணவிகள் அவர்களது பெற்றோருடன் குறித்த பகுதியில் நேற்று மதியம் நீராடச் சென்றனர்.

இதன் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

இதன் பின்னர் இரண்டு மாணவிகள் காப்பாற்றப்பட்ட நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு திருகோணமலை – இறக்கக்கண்டி பாலத்திற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீராட சென்ற நிலையில் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் தமது வகுப்பாசிரியர் உடன் குறித்த கடற் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply