இந்த ஆண்டில் கடந்த 20 நாட்களில் 53,791 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இலங்கைக்கு சராசரியாக 3,000 சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகை தருவதாகவும், முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யர்கள் என்றும்
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்..
மேலும் குறித்த எண்ணிக்கை 10,000ஐ நெருங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..



