தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் மூலம் தினமும் 27 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் மாத்திரம் 13.5 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது.
அத்துடன் கொவிட் முழு ஊரடங்கின் போது பால் வினியோகத்திற்கு தடை இல்லை என்றாலும் கடைகள் மூடப்பட்டதால் விற்பனை பாதிக்கப்பட்டது.
மேலும் கடந்த 3 வார ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இதனால் தமிழகம் முழுவதும் 3 லட்சம் லிட்டர் பால் விற்பனை பாதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சம் லிட்டர் பால் விற்பனை குறைந்தது.
இருப்பினும் சென்னையில் மாத்திரம் 70 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் பாதித்தது.
ஆனால் சனிக்கிழமைகளில் கூடுதலாக விற்பனையாகியுள்ளது.
சென்னையில் வழக்கத்தைவிட கடந்த 3 சனிக்கிழமைகளில் தலா 80 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது.
அதாவது 14.30 லட்சம் லிட்டர் ஆவின் பால் சனிக்கிழமைகளில் விற்பனையாகி உள்ளது.
மேலும் சனிக்கிழமைகளில் கூடுதலாக விற்றாலும் ஞாயிறுகளில் வழக்கமாக விற்கப்படும் அளவை விட குறைவாகவே விற்பனை நடந்துள்ளதாக ஆவின் பால் அதிகாரி தெரிவித்துள்ளார்.



