நாட்டில் இயற்கை வனப் பரப்பை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதுள்ள இயற்கை வனப் பரப்பை 29.2% இல் இருந்து 30 % ஆக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றாடல்த்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அதற்காக மேலும் 65,000 ஹெக்டேயர் நிலத்தில் மரநடுகை செய்யப்பட வேண்டும்.
மேலும் எதிர்காலத்தில் இயற்கை காடுகளில் ரப்பர் பயிற்சியையும் சேர்க்க
சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபாய் செலவில் 500 ஹெக்டயர் பரப்பளவில் இந்த வருடம் ரப்பர் செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் நாட்டில் தற்போது 136,000 ஹேகே பரப்பளவில் ரப்பர் பயிர்ச் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



