நகர உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல்.

0

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக அனைத்து கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்பட்டது.

அத்துடன் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் கொவிட் தொற்றின் மூன்றாவது அறையை உச்சத்தில் இருப்பதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்தலை நடத்தினால் கொவிட் பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை நாளை மறுதினம் பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் பதிலளித்துள்ளது.

Leave a Reply