எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களணி திஸ்ஸமின் மின்உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் களணி திஸ்ஸமின் மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருள் வழங்க கனிய வள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பிரகாரம் இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாளாந்த 1000 மெற்றிக் டன் எரிபொருளை வழங்க தீர்மானித்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் நேற்று மதியம் தடை பட்டமை குறிப்பிடத் தக்கது.



