இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தலில் ஆளும் பா. ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கிடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்றது.
இதற்கமைய தேர்தலுக்கு முன்பே பா. ஜனதா கட்சியிலிருந்து விலகிய மந்திரிகள், சில எம். எல். ஏ. க்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து விட்டனர்.
இதன் பிரகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பான நிலை உருவாகி வருகின்றது.
அத்துடன் உத்தரபிரதேச அரசியலில் புதிய திருப்பமாக சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மருமகள் அமர்நாத் ஜாதவ் , பா. ஜனதாவில் இணைந்தனர்.
மேலும் இவர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பர்திக் யாதவின் மனைவி ஆவர்.
இவர் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் லக்னோகாண்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.



