ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த கூட்டம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இடம்பெறவுள்ள இரண்டு நாள் விவாதம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் விவாதத்திற்காக நேரத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை போதும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
ஆகவே விவாதத்திற்கான நேரத்தை பகிர்ந்துகொள்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



