தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்.

0

எதிர்வரும் 22 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விதிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி குறித்த பயிற்சி நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த முறை 2,943 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன என்பதுடன் 340,508 மாணவர்கள் குறித்த பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

மேலும் இந்த பரீட்சையின் போது சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்ற சகல மாணவர்களும், ஆசிரியர்களும், மண்டப பொறுப்பாளர்களும், செயற்குழுவினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply