மக்களின் பாதுகாப்பு கருதி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத செய்யப்படும் நபர்களை கண்காணிக்கும் நடவடிக்கை காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பிரகாரம் நேற்றைய தினத்தில் மாத்திரம் 3,257 உந்துருளிகளும், 2,396 முச்சக்கரவண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது 7,375 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுள் உரியமுறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 1404 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.



