யாழில் உந்துருளி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் குறித்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதற்கமைய உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த உந்துருளியில் இரு நபர்கள் பயணித்துள்ளதுடன், அவர்கள் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து இந்த உந்துருளியை செலுத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்



