அடுத்த போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கத்தினர்.

0

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம் எடுத்துள்ளது.

இந்நிலையில் தொடருந்து பயண கால அட்டவணை அமுல்படுத்தாமை, தொடர்ந்து ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்யத் தவறியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடருந்து நிலைய அதிகாரிகள் தொடர்பான அனைத்து பணிகளில் இருந்து விலகுவதற்கு தொடருந்து நிலைய நிர்வாக குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply