இந்த ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம் , தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை , சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்தது.
இருப்பினும் இவை இரண்டு முறை பிற்போடப்பட்டன.
மேலும் முன்னர் திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதியும், உயர்தர பறவைகள் இந்த வருடம் பெப்ரவரி மாதம்7 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.



