தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியில் இருந்து பரவகும்புக நோக்கி பயணம் செய்த டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.
குறித்த சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்ததில் குறித்த விபத்து சம்பவிதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், சிலாபம் – பங்கதெனிய – ஆனமடுவ வீதியில் பயணம் செய்த பாரவூர்தி ஒன்று எதிர்த்திசையில் வந்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பங்கதெனிய பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் இன அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



